புதுச்சேரியிலிருந்து கிரண்பேடி மாற்றப்பட்டது காலதாமதமான நடவடிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டது தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகக் காலதாமதான நடவடிக்கை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுத்து நலத்திட்டங்களை முடக்கிய அவரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே தவறு. மேலும், கிரண்பேடி தரம் தாழ்ந்த அரசியலைச் செய்ய […]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், நடப்புக் கல்வியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு பாடத்திட்டமும் […]
தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் என்று கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என பல்வேறு புகார்களை கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம் செய்யப்பட்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் […]
பிரபல ரவுடியின் கழுத்தை அறுத்து கொண்ட கிருஷ்ணாவை என்கவுண்டரில் சுட்டு கொன்ற போலீசார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியான வீரா என்பவர் நேற்று அவரது வீட்டின் அருகே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. சுற்றி வளைத்த கும்பல் அவரின் கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்துச் சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கழுத்தில்லாமல் இருந்த வீராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. Public examinations for class 12 will be held from 3rd to 21st May.#12thPublicexams pic.twitter.com/ftiCBZjb3t — Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) February 17, 2021
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம். அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என பல்வேறு புகார்களை கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், தற்போது துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், கூடுதல் பொறுப்பாக துணை […]
நிரந்தர வருமானம் இன்றி பரிதவிக்கும் மக்கள் மீது தன பங்குக்கு சுமையை ஏற்றுவது சரியா? என்று தமிழருவி மணியன் அறிக்கை. சமீபத்தில் முன்பு இல்லாத அளவைவிட பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. இதற்கு அரசியலை தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமையல் எரிவாயு, உருளை பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.75 […]
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதத்திற்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டார். இதைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் திஷா ரவி கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதையடுத்து திஷா ரவி மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு […]
அமமுக, அதிமுகவுடன் இணையும் என்று யார் சொன்னது? என்று கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக ஆரம்பிக்கப்பட்டதே அதிமுகவை ஜனநாயக முறையில் மீட்டெடுப்பதற்கு தான். தமிழகத்தில் மாபெரும் சாதனை படைத்து மக்கள் ஆதரவுடன் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவதே எங்கள் கொள்கை, மக்கள் நிச்சியமாக அமமுகவை தேர்ந்தெடுப்பார்கள். தப்பித்தவறி திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாங்கல்லாம் எப்போதும் […]
தமிழில் பேசுவதால் தமிழ் மக்களை ஏமாற்றிவிட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சேலம் மண்டலம் மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வைகோ, திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தால், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட முடிவுதான் பாஜகவுக்கு தற்போதும் கிடைக்கும் என்று கூறியுள்ளார். பாஜகவுடன் கைகோர்த்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம் என இயற்ககைக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த நினைக்கிறார் என்றும் […]
மதுவால் வருமானம் அதிகரித்து வருவதால், மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது என்று அரசு கவலை கொள்வதில்லை – உயர்நீதிமன்றம் மதுரை கிளை மதுரை மேலூர் சாலையில் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி, தாஹா முகமது என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வைப்பதற்கு மதுபானக் கடைகள் ஒன்றும் புத்தக கடையோ, […]
ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்க வேண்டும் என்பதே அம்மா அரசின் விருப்பம் – ஓபிஎஸ் இதுகுறித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே அம்மா அரசின் விருப்பம். மூன்றாம் பாலினத்தவர் மீதான தவறான பார்வையை மாற்றி சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவதில் அம்மாவின் அரசு என்றும் துணைநிற்கும் என்று கூறியுள்ளார். மேலும், புதிதாக தொடங்கப்பட்ட […]
மக்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் வந்த மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, வேலூர் வாலாஜாபாத் அருகே உள்ள விசி மோட்டூரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெங்களூரு […]
சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து தலா ரூ.1 லட்சம் நிவாரணம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சரக்கு வாகனத்தில் 33 பெண்கள் விவசாய பணிக்காக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, வேன் எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர். ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் […]
Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். பெட்ரோல், டீசல், […]
தமிழகம்,புதுச்சேரி ,கர்நாடகாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடத்த வேண்டும் என்று அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது .இந்நிலையில் இது தொடர்பாக அமமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில், வரும் 24.02.2021 அன்று, […]
புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை தொடர்ந்து ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி பலம் 19 ஆக இருந்த நிலையில், பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. தற்போது, 4 பேர் அடுத்தடுத்து […]
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிப்பு. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதனை பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக நினைத்து பணிபுரிகிறோம் எனவும் மாநில தலைவர் […]
முதல்வா் முன்னிலையில் புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. தமிழகத்தில் தொழில் வளா்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கொள்கை 2021-ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல்வா் முன்னிலையில் புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ட 4 இடங்களில் தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் 68,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க […]
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு மேற்குத்திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு. […]