பாகுபலி 3-ம் பாகம் வருமா? நடிகர் பிரபாஷ் விளக்கம்.!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரபாஷ். இதுவரை 2 பாகங்கள் வெளியாகி மாபெரும் வசூல்

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரபாஷ். இதுவரை 2 பாகங்கள் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 3-வது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

unknown node

இந்த நிலையில், தற்போது நடிகர் பிரபாஷ் பாகுபலி 3-வது பாகம் குறித்து பேசியுள்ளார். அதாவது, பிரபாஷ், பூஜா ஹேக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

unknown node

அப்போது பேசிய பிரபாஷ் ‘’ நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க எனக்கு ஆசை உள்ளது.. நான் அதிகமாக சம்பளம் வாங்குவதாக பேசுகிறார்கள். எனது படங்கள் 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறைதான் வெளியாகிறது.எனக்கு பொருத்தமான பெண் அமைந்ததும் திருமணம் செய்து கொள்வேன். பாகுபலி 3- பாகம் வருமா என பலர் என்னிடம் கேள்விகள் கேட்கின்றார்கள்.

பாகுபலி 3-ஆம் பாகத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதை தொடங்குவது இயக்குனர் ராஜமவுலி கையில் உள்ளது. எத்தனை படங்களில் நடித்தாலும் பாகுபலியை என்னால் மறக்க முடியாது” என்று கூறியுள்ளார்.