சென்னை :கங்குவா படத்தின் (எடிட்டர்) நிஷாத் யூசுப் இன்று (அக்டோபர் 30) உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகி திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று காலை கொச்சி அருகே பனம்பிள்ளியில் உள்ள அவரது அப்பார்ட்மென்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நிஷாத் யூசுப் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இவரது மரணம் இன்று அதிகாலை 2 மணியளவில் நேர்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இவருடைய இருப்புக்கு காரணம் என்னவென்பது பற்றி சரியான தகவல் வெளியாகவில்லை.
இருப்பினும் கங்குவா படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திடீரென (எடிட்டர்) நிஷாத் யூசுப்உயிரிழந்துள்ள தகவல் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவருடைய மறைவுக்கு சூர்யாவும் தனது இரங்கலை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” நிஷாத் இல்லை என்று கேட்டு மனம் உடைந்தது! கங்குவா அணியின் அமைதியான மற்றும் முக்கியமான நபராக நீங்கள் எப்போதும் நினைவுகூரப்படுவீர்கள்.. எங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும்..! நிஷாத்தின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறியுள்ளார்.
unknown node