வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
unknown nodeBABATrailer [Image Source: Twitter ]
இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். படத்தை ரஜினியே திரைக்கதை அமைத்து தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று தோல்வியை தழுவியது.
unknown nodeBABAComingSoon [Image Source: Twitter ]
இந்நிலையில், படம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் மெருகேற்றியுள்ளனர். இந்த படத்தில் ரஜினி 7 மந்திரங்களை பயன்படுத்துவார். அதில் இரண்டு மந்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் மெருகேற்றப்பட்டு தற்போது படம் ரசிகர்களுக்கு பிடித்தவாறு எடுக்கப்பட்டுள்ளதாம்.
unknown nodeஅதற்கான ட்ரைலரை தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் பழையதாக இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகிறார்கள். விரைவில் படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.