கைதி 2 படத்தில் அனிருத்? சாம் சி எஸ் கொடுத்த ரியாக்சன்!

எல்லாம் லோகேஷ் கனகராஜ் கையில் தான் இருக்கிறது என இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார்.

kaithi 2 anirudh

சென்னை :‘கைதி 2’ படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தரை பயன்படுத்துவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவலாக வெளியாகியுள்ளன. இது லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது ‘தனி ஒருவன் 2’ படத்திற்கு தானே இசையமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர், அறிவிப்பு வீடியோவில் ரசிகர்கள் ஹிப்ஹாப் ஆதிபதி போன்ற இசை தேவை என்று கருத்து தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். அதேபோல் ‘கைதி 2’ படத்திற்கும் ரசிகர்களுக்கு தனது இசை தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

சாம் சிஎஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது: “ஆனால் எல்லாம் லோகேஷின் கைகளில்தான் உள்ளது” என்று கூறி, இயக்குநரின் முடிவையே இறுதியானது என்று ஏற்றுக்கொண்டுள்ளார். இது அவரது தொழில்முறை மனநிலையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். சாம் சி எஸ் இப்படி கூறியுள்ளது ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் சாம் சிஎஸ் இசையை விரும்புவதாகவும், அனிருத் தேர்வு ஏமாற்றம் அளிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கைதி 2’ படத்திற்கு சாம் தான் வேணும் என தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, கைதி படத்தின் முதல் பாகத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்த பிஜிஎம் இன்னும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக இருந்து வரும் நிலையில், கைதி 2 படத்திற்கு யார் இசையமைக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.