நான் யாருக்கும் போட்டி இல்லை... என்னை விட்ருங்க – சிவகார்த்திகேயன்!

Industry-ல் இருக்கும் சிலர் தடைபோட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி வர நான் ரெடி என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

sivakarthikeyan

சென்னை :தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், நேற்று நடைபெற்ற ‘தாய் கிழவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பல திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டனர். சிவகார்த்திகேயன் தனது உரையில் தனிப்பட்ட பயணம், திரைத்துறைக்கு திருப்பிக் கொடுக்கும் எண்ணம், ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றை உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், “நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். திரைத்துறைக்கு தான் பெற்ற பெயர், புகழ் ஆகியவற்றை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற படங்களை தயாரிப்பதாகவும் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் மேலும் கூறியதாவது, “நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. மக்கள் ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன்” என்றார். தடைகளைத் தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் போன்ற இயக்குநர்களை தேடிக்கொண்டு வருவேன் என்றும் உறுதியளித்தார்.தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “மக்கள் ஆரம்பத்தில் இருந்து எப்போதுமே எனக்கு ஆதரவு கொடுத்துதான் வருகிறார்கள். அதனால்தான் திருச்சியில் இருந்து வந்த என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள்” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

திரைத்துறையில் தடைகள் இருந்தாலும், ரசிகர்களின் ஆதரவால் அவற்றைத் தாண்டி வருவதாகவும் தெரிவித்தார்.ஒட்டுமொத்தமாக, ‘தாய் கிழவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் ஆற்றிய உரை மிகுந்த உணர்ச்சிகரமாகவும், நன்றியுணர்வுடனும் அமைந்திருந்தது. தனது பயணம், ரசிகர்களின் ஆதரவு, திரைத்துறைக்கு திருப்பிக் கொடுக்கும் எண்ணம், சிலரின் தடைகளைத் தாண்டி வரும் உறுதி ஆகியவற்றை அவர் தெளிவாக வெளிப்படுத்தினார்.