இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இரு பெரிய படங்கள் ஜனநாயகன் மற்றும் பராசக்தி. தவெக தலைவர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ஜனவரி 9ஆம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ ஜனவரி 10ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இரு படங்களும் பொங்கல் ரிலீஸ் போட்டியில் மோதுவதாக ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆனால், திடீர் திருப்பமாக இரு படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் தாமதம் ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.’ஜனநாயகன்’ படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க தாமதம் செய்ததால், படக்குழு ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட தடை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.மறுபுறம், ‘பராசக்தி’ படத்திற்கும் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் பொங்கல் ரிலீஸ் போட்டி பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்டது.
ஆனால், தற்போது தணிக்கை வாரியம் ‘பராசக்தி’ படத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ் கிடைத்ததால் ‘பராசக்தி’ படம் திட்டமிட்டபடி ஜனவரி 10ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், பொங்கல் ரிலீசில் ஒரு பெரிய படம் உறுதியாக வந்தாலும், ‘ஜனநாயகன்’ தாமதம் ரசிகர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு இரு பெரிய நடிகர்களின் படங்கள் மோதுவது வழக்கமான உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ஜனநாயகன்’ தாமதம் போட்டியை பாதித்துள்ளது. ‘பராசக்தி’ தனியாக ரிலீஸ் ஆனால் வசூல் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. ‘ஜனநாயகன்’ வழக்கு விரைவில் தீர்க்கப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
