"கூலியில் ரஜினி சார் வாய்ஸ் AI-தான்..அனிருத் இல்லாமல் படமே பண்ணமாட்டேன்" – லோகேஷ் கனகராஜ்.!

கூலி படத்தில் ரஜினி சார் வாய்ஸ் AI-தான், எதிர்காலத்தில் சினிமாத்துறையில் AI உதவி இருக்கும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

Lokesh kanagaraj

கோவை :இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 18-ம் நாளான இன்று ரசிகர்களுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் படத்தை ரசித்தார்.

கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸில் ரசிகர்களுடன் சேர்ந்து ’கூலி’ படத்தை பார்த்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசித்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், மக்கள் திரையரங்குகளில் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் அனுபவிக்க தியேட்டருக்கு ஒரு விசிட் அடித்திருக்கிறார்.

பின்னர், கோயம்புத்தூரில் நடந்த SSVM டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2025 இல் மாணவர்களிடம் உரையாற்றிய திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்படத் தயாரிப்பில் ஆர்வத்தின் முக்கியத்துவம் மற்றும் பார்வையாளர்களின் திருப்தியைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒருபோதும் திரைப்படங்களை உருவாக்க மாட்டார் என்பது குறித்தும் பேசினார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தங்கள் படத்தின் இசையில் AI-ஐப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்று கேட்டதற்கு, “எதிர்காலத்தில் அனிருத் இல்லாமல் நான் ஒருபோதும் படம் செய்ய மாட்டேன். அவர் சினிமாவை விட்டுவிட்டால், இசைக்கு AI-ஐப் பயன்படுத்துவது பற்றி நான் யோசிக்க வேண்டியிருக்கும். ஆனால் அது விரைவில் நடக்கப்போவதில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், AI உதவியுடன் கூலி திரைப்படத்தில் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது; வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட அதனுடைய உதவி அதிகமாக இருக்கும்; AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்” என்று கூறினார்.