ஈஸ்வரன் பட இயக்குனரின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தின் டைட்டில் குற்றமே குற்றம்!

The name of the film starring actor Jay under the direction of director Suchindran has been reported as Crime.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிக்கும் படத்தின் பெயர் குற்றமே குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெய் தற்பொழுது தான் வெப்சீரிஸ் நடித்து இருந்தார். அது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக அவர் புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். ஏற்கனவே வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்தில் உருவாகிய பார்ட்டி எனும் படம் முழுதும் நிறைவடைந்துள்ளன. ஆனால், இன்னும் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அது தவிர வெற்றி செல்வன் அவர்களின் இயக்கத்தில் எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் உள்ளிட்ட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஈஸ்வரன் படத்தின் இயக்குனர் சுசீந்திரன் அவர்களது இயக்கத்தில் ஜெய் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் தற்போது திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த படங்களில் ஒரு படத்திற்கு குற்றமே குற்றம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஸ்ருதி வெங்கட் அவர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படம் மார்ச் மாதத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ஈஸ்வரன் பட இயக்குனரின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தின் டைட்டில் குற்றமே குற்றம்!