சென்னை :குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம். அந்த அளவுக்கு பெரிய பிரச்சினையாக மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரம் சின்னத்திரையே புரட்டி போட்டுள்ளது.
நிகழ்ச்சியில், தொகுப்பாளராக கலந்துகொண்ட தன்னை தன்னுடைய வேலையை பார்க்கவிடாமல் பிரியங்கா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக அவருடைய பெயரை குறிப்பிடாமல் சூசகமாக குற்றம்சாட்டி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியிருந்தார். அத்துடன் தனக்கு காசு, பணத்தை விட சுயமரியாதை முக்கியம் எனவும் கூறியிருந்தார்.
மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை, தொடர்ந்து பிரியங்கா தான் இதற்கு காரணம் என சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் தீயாக கிளம்பியது. இந்த பிரச்னையோடு, சூட்டோடு சூட்டாக, பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரை பற்றி சில பிரபலங்கள் மோசமாக பேசிய பழைய வீடியோக்களையும் வெளியீட்டு அவருடைய உண்மையான குணம் இது தான் என விமர்சித்து வருகிறார்கள்.
இப்படியான விமர்சனங்கள் எழுந்த சூழல், பிரியங்கா அந்த மாதிரி ஒரு ஆள் இல்லை என்பது போல, அவருக்கு ஆதரவாக, அமீர், பாவனி, குரேஷி, சுனிதா, ஆகியோர் வீடியோக்களை வெளியீட்டு இருந்தார்கள். பிரியங்காவுக்கு ஆதராகவு ஒரு பக்கம் அதிகான நிலையில், மணிமேகலை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பிரியங்கா குக் வித் கோமாளியில் மணிமேகலையை பேசவிடாமல் அவர் பேச வேண்டிய விஷயங்களை பேசியதாக சுட்டிக்காட்டி மீண்டும் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.
நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளகுறும்படம்ஒன்றில் பிரியங்கா “இசையமைப்பாளர் தேவா நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது “நீங்கள் எங்களுடைய நிகழ்ச்சிக்கு வருகை தந்து எங்களை சந்தோசபடுத்தியதற்கு நன்றி” என கூறினார். அதைப்போல, ஷாலின் ஜோயா வெளியேறும்போதும் “நீ உன்னுடைய வெகுளித்தனம் காரணமாக அனைவரையும் கவர்ந்துவிட்டாய்”எனவும் கூறினார்.
அதைப்போல, பூஜாவும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது போல, தோரணையில் பிரியங்கா பேசியதாகவும், பூஜாவை தொடர்ந்து, அதற்கு அடுத்ததாக திவ்யா துரைசாமி எலிமினேட் ஆகும்போது தான் மணிமேகலைக்கு நன்றாக பேசவே வாய்ப்பு கிடைத்தது அப்போது தான் அவர் தொகுப்பாளர் போல, பேசியதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
மணிமேகலைக்கு நிகழ்ச்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த சூழலில், பிரியங்கா அப்படி செய்யும் குணம் இல்லை மணிமேகலைக்கு தனது திறமை மீது நம்பிக்கை இல்லை என்கிற பேச்சுக்கள் எழுந்து பிரியங்காவுக்கு ஆதரவு குவிந்தது. இதன் காரணமாக, தான் மணிமேகலை ஆதரவாளர்கள் இப்படியான வீடியோக்களை வெளியீட்டு வருகிறார்கள்.
Answer is here. #Manimegalai is Right!! @iamManimegalai You Rock!!pic.twitter.com/UPLK0T0HMK
— Unbiased Replies (@UnbiasedReplies) September 21, 2024
