கேரளான்னு ஒரு மாநிலம் இருக்குறதாவது தெரியுமா? ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை!

சென்னை : கேரளான்னு ஒரு மாநிலம் இருக்குறதாவது தெரியுமா? என ரஜினிகாந்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

blue sattai maran about rajini

மலையாள சினிமாவில் பற்றி எரியும் தீயை போல பரபரப்பை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, ராதிகா, விஷால், சர்மிளா, சனம் ஷெட்டி, போன்றார் பேசியிருந்தார்கள். ஆனால், பல பிரபலங்கள் பேச மறுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், குறிப்பாக ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுத்தனர். அப்போது, செய்தியாளர் ஒருவர் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு தன்னுடைய பாணியில் பதில் அளித்த, நடிகர் ரஜினிகாந்த் ” எனக்கு அதுப் பற்றி எதுவும் தெரியாதுங்க சாரி ” என சட்டென பதில் கூறினார். இந்த விவகாரம் பெரிய அளவில் போய்க்கொண்டு இருக்கிறது இது பற்றி எப்படி உங்களுக்கு தெரியாமல் இருக்கும்? என நெட்டிசன்கள் பலரும் கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

இந்த சூழலில், ஒரு படம் வெளியானால் அந்த படத்தை கலாய்த்து பேசும் ப்ளூ சட்டை மாறன் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி ரஜினி தெரியாது என்பதை வைத்து தனது சமூக வலைதள பக்கங்களில் கலாய்த்து வருகிறார். வடிவேலுவின் காமெடி காட்சி கொண்ட புகைப்படம் ஒன்றை எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு கேரளான்னு ஒரு மாநிலம் இருக்குறதாவது தெரியுமா?’ ‘தெரியும் தம்பி. ஆனா தெரியாது’ என ரஜினி பெயரை குறிப்பிடாமல் சூசகமாக பதிவிட்டுள்ளார்.

மற்றோரு பதிவிலும் வடிவேலுவின் மீம் புகைப்படத்தை பகிர்ந்து தெரியுமா? என செய்தியாளர்கள் கேட்டதை வைத்தும், அதற்கு ரஜினி தெரியாது சொன்ன பதிலையும் வைத்து தெரியாது…தெரியாது… என கிண்டல் செய்யும் விதமாக  பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி கேட்டால் கோலிவுட் பிரபலங்கள் பேசாமல் ஓடிப்போவதாகவும் சூசகமாக பதிவிட்டுள்ளார். ரஜினி பற்றி அவர் பதிவிட்டுள்ள பதிவுகள் வைரலாகி வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் உங்களுக்கு வேலை இல்லையா? என ப்ளூ சட்டை மாறனை திட்டி வருகிறார்கள்.

blue sattai maran
blue sattai maran [file image]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai