"ஈஸ்வரன்" திரைப்படம் எப்போம் ரிலீஸ் தெரியுமா..?

Eeswaran, directed by Suchindran and starring actor Simbu accting s set to release on January 14 next year 2021

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த பாடலும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் ஈஸ்வரன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.