GOAT : ‘நீங்க தான் பாத்துக்கணும்’…சிவகார்த்திகேயனிடம் விஜய் சொன்ன சூசக விஷயம்?

GOAT படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் இருவரும் இணைந்து பேசிய விஷயத்தை பார்த்தவுடன் திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 

SK and vijay

சென்னை : விஜயின் “GOAT” படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த ஆதரவை பெற்றுள்ள நிலையில், படத்தில் இருக்கும் பல சுவாரசியமான சம்பவங்களை பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதில் குறிப்பாக சொல்லலாம் என்றால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயனிடம் விஜய் பேசும் பஞ்ச்  டயலாக்குகளும், அதற்கு சிவகார்த்திகேயன் பதில் சொல்லும் பஞ்சும் தியேட்டரை மட்டுமின்றி கோலிவுட்டேயே அதிர வைத்துள்ளது.

படத்தில் வரும் முக்கியமான காட்சியில் விஜய் “சிவகார்த்திகேயனிடம் ஒரு விஷயம் ஒன்றை கையில் கொடுத்து நீங்கள் தான் இதனை பார்த்துக்கொள்ளவேண்டும்” எனக் கூற, அதற்கு சிவகார்த்திகேயன் “பார்த்துகிறேன் நீங்கள் இதை விட எதோ முக்கியமான வேலைக்காக சொல்கிறீர்கள் அதை நீங்கள் பார்த்துக்கோங்க” என பதில் அளித்தார். அவர் அளித்த பதிலை பார்த்தவுடன் திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

விஜய் கோட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 69-வது படத்தில் நடித்துவிட்டு முழுவதுமாக சினிமாவை விட்டு அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார். எனவே, அவருடைய சினிமா இடத்திற்கு எந்த நடிகர் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துகொண்ட சூழலில், அதனை சூசகமாக வைத்து தான் வெங்கட் பிரபு படத்தில் வசனமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, விஜய்க்கு அடுத்ததாக குடும்ப ரசிகர்கள் அதிகமாக இருக்கும் ஹீரோ சிவகார்த்திகேயன் தான் எனவே, விஜய் இடத்தை அவர் பிடிப்பார் என்கிற பேச்சு உள்ளது. இந்த சூழலில், ‘GOAT ‘படத்திலே அதற்கு சூசகமாக விஜய் இப்படி பேசியுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் வைத்து எடிட் செய்து வீடியோக்களை வெளியீட்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
o panneerselvam edappadi palanisamy
James Franklin srh 2025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson