பூஜையுடன் தொடங்கப்படவுள்ள AK 61..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான "வலிமை" திரைப்படம் வசூலில் மிரட்டி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் தனது 61-வது

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான “வலிமை” திரைப்படம் வசூலில் மிரட்டி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்குகிறார்.

இந்த படத்தில் ஹீரோ , வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஆதிதி ரா நடிக்கவுள்ளதாகவும், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

அஜித் இப்படத்திற்காக 25- கிலோ எடையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே 10-கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக AK61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

unknown node

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் AK-61 படத்திற்கான பூஜை இன்று நடைபெறுவதாக செய்திகள் பரவி வருகிறது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #AK ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். பூஜை நடந்தால் டைட்டில் அதற்கான புகைப்படங்கள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இன்று பூஜை நடக்குமா தலைப்பு அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.