மன்மதன் 2வுக்கு ரெடியான சிம்பு.! ஜோதிகா ஓகே சொல்வாரா.? வெளியான ஷாக்கிங் தகவல்...

நடிகர் சிம்பு "வெந்து தணிந்தது காடு" படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக "பத்துதல" திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு

நடிகர் சிம்பு “வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “பத்துதல” திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

Manmadhan 2 [Image Source: Google ]

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக எந்த திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை. எனவே அவர் மீண்டும் ஒரு திரைப்படம் இயக்கி அவரே நடிக்க உள்ளாராம். அந்தத் திரைப்படம் கடந்த 2004- ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அடித்த மன்மதன் படத்தின் இரண்டாவது பாகம் தானாம்.

unknown node

Silambarasan TR [Image Source: Google ]

இந்த திரைப்படத்திற்கு சிம்பு தான் திரைக்கதை அமைத்து, கதை எழுதி இருப்பார்.  ஏ ஜே முருகன் இயக்கி இருந்தார். எனவே, கதை சிம்பு உடையது என்பதால் சிம்பு அந்த படத்திற்கான இரண்டாவது பாகத்தை எடுத்த திட்டமிட்டுள்ளாராம். முதல் பாகத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். எனவே இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க வாய்ப்பே இல்லை என்பதால் ரசிகர்கள் சற்று ஷாக்கில் இருக்கிறார்கள்.

இதையும் படியுங்களேன்-என்னோட பாய் பெஸ்டி இவர்தான்… ஒப்பனாக கூறிய நிதி அகர்வால்.!

unknown node

Manmadhan 2 [Image Source: Google ]

எனவே  இந்த இரண்டாவது பாகத்தில் நடிக்க வைக்க மூன்று இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல் ஒன்று இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.  சித்தி இத்தானி, அதிதி ஷங்கர், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். எனவே விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மன்மதன் 2 உருவாகவுள்ளதாக பரவுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.