நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கெத்தாக களமிறங்கும் சூர்யா – பாலா.!? மாஸ் அப்டேட் இதோ...,

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும்

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் சூரிய ரசிகர்கள் நாளை அப்டேட் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். நாளை அப்டேட் வெளியாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.