தலைவர்-168 & தல-60! இரு திரைப்பட ஷூட்டிங்குமே ஒரே நேரத்தில்! ஒரே இடத்தில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 168 வது திரைப்படமாக உருவாக உள்ள படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மீனா,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.

தல அஜித்தின் 60வது திரைப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி சிட்டியில் நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 168 வது திரைப்படமாக உருவாக உள்ள படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி என பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இமான் இசையமைக்க உள்ளார். வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள உள்ளார்.

இதே போல தல அஜித் நடிக்க உள்ள அவரது 60வது திரைப்படத்தை வினோத் இயக்கவுள்ளார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.