ஜெயலலிதா வாழ்கை வரலாற்றில் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோ! அதிர்ச்சியில் படக்குழு!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை கோலிவுட்டில் பலர் இயக்க உள்ளனர். இதில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது நடிகர்கள்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை கோலிவுட்டில் பலர் இயக்க உள்ளனர். இதில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது நடிகர்கள் தேர்வு முடித்து ஷூட்டிங் கிளம்பிவிட்டார்.

unknown node

இந்த படத்திற்கு தலைவி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் ஹீரோயின் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அதற்காக அரவிந்த் சாமி மீசை, தாடி இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்து புது தோற்றத்தில் இருக்கிறார்.

unknown node

இப்படத்தில் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் காட்சிகள் உள்ளதாம். அதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க என்.டி.ஆரின் பேரனும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசப்பட்டதாம். ஆனால் அவர் தற்போது பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் நடித்து வருவதால் இப்படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். அதனால் அந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழு தீவிரமாக யோசித்து வருகிறதாம்.