மாத தொடக்கத்துல தியேட்டர் கடைசியில் ஓடிடி…மின்னல் வேகத்தில் வந்த ரெட்ரோ!

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் வரும் மே 31-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

suriya retro

சென்னை : சூர்யாவுக்கு இந்த படமாவது பெரிய கம்பேக் படமாக இருக்கும் என பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காரணத்தாலும் படத்தில் சூர்யாவின் லுக் இதுவரை இல்லாத அளவுக்கு இருந்த காரணத்தால் படத்தின் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் டிரைலரையும் படக்குழு படம் வெளியாவதற்கு முன்பு வெளியிட்டிருந்தது.

அந்த டிரைலரை பார்த்த பலரும் படத்திற்கு ஆவலுடன் காத்திருந்த நிலையில் படம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடந்த மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான பிறகு விமர்சனங்கள் பாசிட்டிவாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலவையான விமர்சனங்கள் தான் வந்தது. இதனால் படக்குழுவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

படக்குழுவுக்கு ஏமாற்றமோ இல்லையோ சூர்யா ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனென்றால், இனித்த படத்திற்கு முன்பு சூர்யாவுக்கு கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படம் கலவையான விமர்சனங்களை கூட பெறவில்லை முழுக்க முழுக்க எதிர்மறையான விமர்சனத்தை தான் சந்தித்தது. எனவே, சூர்யா ரசிகர்கள் பலரும் அடுத்ததாக ரெட்ரோ படத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

கடைசியில் ரெட்ரோ திரைப்படமும் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்பது சோகமான விஷயமாகவும் அமைந்துள்ளது. எனவே, படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்பதால் விரிவாகவே ஓடிடிக்கும் வந்துள்ளது. பொதுவாகவே ஒரு படம் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்றது என்றாலோ தோல்வி அடைந்தது என்றாலோ ஒரு மாதம் பிறகு தான் ஓடிடிக்கு வரும்.

உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ரெட்ரோ படத்துடன் அதே நாளில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது ஆனாலும், ஒரு மாதங்களுக்கு பிறகு அதாவது ஜூன் 6 தான் ஓடிடிக்கு வருகிறது. ஆனால், ரெட்ரோ படம் அதற்கு ஒரு வாரம் முன்பு அதாவது வரும் மே 31-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் தொடக்கம் சரியாக 1-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ஒரு மாதங்கள் கூட முடியவில்லை என்கிற சூழலில் மாதம் கடைசியான மே 31-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் படம் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்