தவெக கொள்கை பாடல்: “என்னை நம்பியதற்கு நன்றி விஜய் சார்” தெருக்குரல் அறிவு நெகிழ்ச்சி.!
தவெக கொள்கை விளக்க பாடலை உருவாக்க வாய்ப்பு கொடுத்ததற்கு தெருக்குரல் அறிவு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தவெக கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. “வெற்றி வெற்றி வெற்றி” எனத் தொடங்கும் இப்பாடலை தெருக்குரல் அறிவு உடன் இணைந்து விஜய் பாடியுள்ளார்.
திருவள்ளுவர் வழியில் தவெக கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை நமது அரசியல் வழிகாட்டியாக ஏற்போம் என விஜய் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், தவெக கொள்கை விளக்க பாடலை உருவாக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ள தெருக்குரல் அறிவு, என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, உன்னால் மட்டுமே முடியும் என்று விஜய் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில், “தவெக ஐடியாலஜி பாடலை இசையமைக்க ‘என்னை தேர்ந்தெடுத்து ஏன்?’ என விஜய் சாரிடம் கேட்டேன்… ‘உன்னால் மட்டுமே முடியும்.’ என்று கூறினார் அவர் என்னை நம்பியதற்கு நன்றி விஜய் சார்.
உங்கள் குரலை பதிவு செய்வது என் வாழ்வின் மிகப்பெரிய நினைவாக இருக்கும். உங்கள் அரசியல் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்று தெருக்குரல் அறிவு நெகிழ்ச்சி பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025