சென்னை :சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காரணத்தால் வெளிமாநிலங்களில் ப்ரோமோஷன் செய்தால் மட்டும் தான் படத்திற்கு விளம்பரம் கிடைக்கும். அப்படிக் கிடைத்து படம் பார்க்க வந்தால் மட்டும் தான் படம் எடுக்கச் செலவு செய்த தொகையை மீட்டெடுக்க முடிவும் எனப் படக்குழு ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரண்டாவது பாடல் “YOLO”
படத்தின் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக தான் படத்தினுடைய இரண்டாவது பாடலான “YOLO” என்கிற பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டனர். பாடலில் சூர்யா மற்றும் நாயகி திஷா பதானி ஸ்டைலிஷான லுக்கில் இருந்தார்கள். பாடலும் துள்ளலான இசையுடன் சேர்ந்து அருமையாக இருந்தது. பாடலுக்கு மக்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பும் கிடைத்து வருகிறது.
நீக்கப்பட்ட கவர்ச்சிகாட்சி
இந்த படத்தில் திஷா பதானி இருக்கிறார் என்ற தகவல் வெளியானதும் கண்டிப்பாகப் படத்தில் கவர்ச்சியான கெட்டப்பில் அவர் இருப்பார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்ததை போலவே, சமீபத்தில் வெளியான அந்த “YOLO” பாடலில் அப்படியான காட்சி ஒன்று இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த காட்சி மிகவும் கவர்ச்சியாக இருந்த காரணத்தால் சென்சார் கட்டில் அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.
அந்த காட்சி நீக்கப்பட்டது குறித்த சென்சார் சான்றிதழும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன், அடுத்ததாக வரும் பாடல்களில் அப்படியான காட்சிகள் இருந்தால் அதனை மாற்றவும் செய்யவேண்டும் எனவும் படக்குழுவுக்கு சென்சார் குழு கண்டிஷன் போட்டுள்ளது.
unknown node