அந்த வெள்ளை மனசு இருக்கே அதுனால தான நீங்க சின்ன தல – ஹர்பஜன் சிங்.!

பிரெண்ட்ஷிப் படக்குழுக்கு வாழ்த்து தெரிவித்த ரெய்னாவிற்கு ஹர்பஜன் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரெண்ட்ஷிப் படக்குழுக்கு வாழ்த்து தெரிவித்த ரெய்னாவிற்கு ஹர்பஜன் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார்.

unknown node

இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டிஎம் உதயகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.பிளாக் ஷீப் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

unknown node

நாளை திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” பஜ்ஜி பா ஹர்பஜன் சிங் என் அண்ணாத்த! பிரெண்ட்ஷிப் ட்ரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது. பிரெண்ட்ஷிப் டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க” என தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

unknown node

இதனையடுத்து ஹர்பஜன் சிங் ரெய்னாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் “நன்றி ரெய்னா தம்பி!! உங்களோட வாழ்த்துகள் ரொம்ப பிரமாதம்.மொத்த பிரெண்ட்ஷிப் டீமும் பயங்கர ஹாப்பி ! மனசார வாழ்த்து சொல்லுற அந்த வெள்ளை மனசு இருக்கே அதுனால தான நீங்க சின்ன தல.மறக்காமநீங்களும் நம்ம சிஸ்கே பிள்ளைகள் எல்லாரும் பிரெண்ட்ஷிப் படம் பாருங்க..” என நன்றியை தெரிவித்துள்ளார்.

unknown node