அண்ணாத்த படத்தில் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், படத்தில் தங்களுக்கான படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், மீனா, சதீஸ் ஆகியோர் தங்களுக்கான டப்பிங் பணிகளை தொடங்கி முடித்துள்ளனர்.
இதனையடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பாக லக்னோவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில், தற்போது இப்படத்தில் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அபிமன்யு சிங் தமிழில் வேலாயுதம், தலைவா, தீரன் அதிகாரம் ஒன்று, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
unknown node