2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 50-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
unknown nodeஇந்த இரு அணிகளுமே ஏற்கனவே ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 8 வெற்றி,4 தோல்விகள் ஆகும்.சென்னை அணி 8 வெற்றிகள் பெற்றதன் மூலம் 16 புள்ளிகளுடன் 2 இடத்தில் உள்ளது.
அதேபோல் டெல்லி அணியும் 12 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 8 வெற்றி,4 தோல்விகள் ஆகும்.8 வெற்றிகள் பெற்றதன் மூலம் 16 புள்ளிகளுடன் 1 இடத்தில் உள்ளது.ரன்ரேட் அடிப்படையில் டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும்.