இறுதியில் அதிரடியை காட்டிய தோனி ,ராயுடு! பஞ்சாப்  அணிக்கு  161 ரன்கள் வெற்றி இலக்கு

this news Finally, Dhoni, Rayudu! Punjab scored 161 runs to win

கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிக்கு  161 ரன்கள் வெற்றி இலக்காக  சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி நிர்ணயம் செய்துள்ளது.

18-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு அடித்து ஆடினார்கள்.அதிரடியாக விளையாடிய வாட்சன் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இதன் பின்னர் டு பிளேஸிஸ் 54,ரெய்னா 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

unknown node

பின்னர் தோனி மற்றும் ராயுடு ஜோடி சேர்ந்து விரட்டலை தொடங்கினர்.இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் அடித்தது.அதிரடியாக விளையாடிய தோனி 23 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.அதேபோல் ராயுடு 15 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியின் பந்துவீச்சில் அஸ்வின் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் பின்னர் 161 ரன்கள் வெற்றி இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணி களமிறங்க உள்ளது.