4 தினங்கள் விடுமுறையாக இருப்பதால் நெரிசல் இல்லாமல் மக்கள் வெளியூர் செல்கின்றனர் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் பேருந்துகள் இயக்கம் பற்றிய ஆய்வு செய்தார்.ஆய்வுக்கு பின்னர் அவர் கூறுகையில், 4 தினங்கள் விடுமுறையாக இருப்பதால் நெரிசல் இல்லாமல் மக்கள் வெளியூர் செல்கின்றனர். உரிய அனுமதியில்லாமல் சென்ற 4 தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் கேட்ட பணம் கொடுக்கப்பட்டுள்ளது. கேட்ட அனைத்தும் வழங்கிய பின்னரும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் என்று சொல்கின்றனர் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.