சர்கார் பட விவகாரம்...!முதலமைச்சர் பழனிசாமி- அமைச்சர் கடம்பூர் ராஜூ அவசர ஆலோசனை...!

சர்கார் பட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியுடன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சர்கார் பட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியுடன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது.

ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் அவர்கள் சர்கார் ஓடும் திரையரங்கில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

unknown node

இந்நிலையில் சர்கார் பட விவகாரம் தொடர்பாக  சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.