இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ...! 2 பேர் கைது ...!அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு...!

இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த

இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணிரத்தினம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய்என படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் அதிகமானோர் நடித்துள்ளனர்.

unknown node

இந்த படம் வெளிவந்து நான்கு நாட்களே ஆன நிலையில் உலகம் முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.இன்று சென்னை அபிராமபுரத்தில் உள்ள செக்க சிவந்த வானம் படத்தின் இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

unknown node

தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இந்நிலையில்  இது தொடர்பாக பாலன், தனசேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலைத் தொடர்ந்து மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.