ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று எடுக்கப்பட்ட வீடியோ ...!தனி அறையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டது...!சசிகலா தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு தகவல்

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்  ஜெயலலிதா சிகிச்சை குறித்து  பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்  ஜெயலலிதா சிகிச்சை குறித்து  பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

unknown node

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.

unknown node

அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

unknown node

இந்நிலையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்  ஜெயலலிதா சிகிச்சை குறித்து  பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்,ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று எடுக்கப்பட்ட வீடியோ அப்பலோவில் தனி அறையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டது என மருத்துவர் பாபு ஆப்ரகாம் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று  வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.