எடப்பாடி அரசுக்கு அடுத்த ஆப்பு ...!எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க  தடை ..!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க  தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க  தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாநடைபெற்றது.முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

unknown node

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில்  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் தினேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க  தடை விதித்துள்ளது.மேலும்  பாதி கட்டப்பட்டுள்ள நிலையில் வழக்கு முடியும் வரை எம்ஜிஆர் வளைவை திறக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டும். கட்டுமானப் பணிகளை முடித்துக்கொள்ளலாம் ஆனால் திறக்கக்கூடாது  என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.