சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமன்...! ரூ.5 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு...!

சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உடல் நல குறைவு காரணமாக நெல் ஜெயராமன் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவருக்கு திரைப்பட நடிகர்களான சிவகார்த்திக்கேயன் மற்றும் கார்த்திக் ஆகியோர் உதவி செய்தனர். இதன் பின் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ‘நெல்’ ஜெயராமனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிலையில்  சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியை உடனடியாக வழங்க வேளாண்துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட உத்தரவில்,  சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியை உடனடியாக வழங்க வேளாண்துறை வழங்க வேண்டும். பாரம்பரிய நெல்ரகங்களை பாதுகாப்பதில் ஜெயராமன் ஆற்றிய சேவையை அங்கீகரித்து பாராட்டும்விதமாக ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயராமன் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.