சென்னை விமான நிலையம்முதல்கத்திபாராவழியாகவும்,கத்திபாராமுதல்சின்னமலைவழியாகவும் உள்ள அண்ணா சாலை ,சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஈசிஆர் போன்ற சாலைகளில் கனரக சரக்கு வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைஅக்டோபர் 11(இன்று ) மற்றும்12வெள்ளி, சனிகாலை 6 மணி முதல் 11 மணிவரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.அடுத்ததாகஅக்டோபர் 11இன்று வெள்ளிக்கிழமைமதியம் 12 30 மணி முதல் பிற்பகல் 2 மணிவரைபெருங்களத்தூரில்இருந்து சென்னைக்கு உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும்ஓசந்திப்பில் இருந்து வழி மாற்றப்பட்டுமதுரவாயல்பைபாஸ் வழியாக நகருக்குள் செல்ல திருப்பி விடப்படும். அதேபோல தென் சென்னை பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும்பல்லாவரம் ரேடியல் சாலைவழியாக அதேமதுரவாயல் பைபாஸிற்குதிருப்பி திருப்பி விடப்படும்.
அக்டோபர் 11வெள்ளிக்கிழமை (இன்று )பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணிவரைஜிஎஸ்டி சாலையில் வரும் எல்லா வாகனங்களையும்100 அடி சாலைக்கு திருப்பி விடப்படும்.
அக்டோபர் 11வெள்ளிக்கிழமை (இன்று )பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணிவரை மற்றும்அக்டோபர் 12சனிக்கிழமைகாலை 7 மணி முதல் 2 மணிவரையும், ராஜீவ் காந்தி சாலை வழியாக சென்னை நகருக்குள் வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பின் மூலம் பெரும்பாக்கம் வழியாக சென்னை நகருக்குள் செல்ல திருப்பி விடப்படும்.ஈசிஆர்வழியாக வரும் அனைத்து வாகனங்களும் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதி கிடையாது. என சென்னை போக்குவரத்து சார்பாக ஆறிவிக்கப்பட்டுள்ளதாம்.