#Breaking : தூத்துக்குடியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!

Holidays have been announced for schools and colleges in Thoothukudi tomorrow.

தூத்துக்குடியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை நீடிப்பதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.