நீட் போராட்டம் குறித்து கேள்வி...'இங்கயே ஆயிரம் பிரச்னை இருக்கு'- அமைச்சர் தமிழன் பார்த்திபன்!

நீட் தேர்வு போராட்டம் மற்றும் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அளித்த பதில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Hero Image

டெல்லி : நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்தும், முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்தும் செய்தியாளர்களின் கேள்விக்குத் போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அளித்துள்ள பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக வெடித்துள்ளது.

"இங்க இருக்கிறதைப் பாருங்க, இங்கயே ஆயிரம் பிரச்சனை இருக்கு. டெல்லிப் பிரச்னையை அவங்க பாத்துப்பாங்க. சங்ககிரியில் புது பஸ் ஸ்டாண்டுக்குப் பேருந்துகள் வரவில்லை என்று கோரிக்கை வைத்துள்ளனர், அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

வருகிற வழியில்கூட 300 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலைப் புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். மக்களுக்கு இதுபோன்று தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் மற்றும் பாதியில் நிற்கும் பல்வேறு பணிகள் உள்ளன. அவற்றைச் செய்து பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து புதிதாக வெளியாகவிருக்கும் திரைப்படம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அது ஒரு தீபாவளி மாதிரி, பொங்கல் மாதிரி, ஒரு திருவிழா (Festival) மாதிரிதான் அதைப் பார்க்கிறோம். அப்படித்தான் நாங்கள் அனைவரும் அதை எதிர்பார்க்கிறோம்," என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

நீட் போராட்டம் குறித்து கேள்வி...'இங்கயே ஆயிரம் பிரச்னை இருக்கு'- அமைச்சர் தமிழன் பார்த்திபன்!