தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ....!

Holidays have been declared for schools and colleges in 14 districts in Tamil Nadu today due to continuous rains.

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதாலும்,  தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும் இன்று 14 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்தில் கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.