வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளுடன் நட்புறவு என்பதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா , அமெரிக்க மக்களின் நலன், அமெரிக்காவே உலக நாடுகளின் தலைமை என்ற விதத்தில் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் உடன்.., முன்னதாக உக்ரைன் நாட்டுடன் கனிம வள ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி , உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி அதில் உடன்பாடு இல்லாமல் ட்ரம்ப் […]
எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே இந்த சேவை அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் செயல்படுகிறது. இந்த சூழலில், மஸ்க் தென் ஆப்பிரிக்காவிலும் செயல்படுத்த அந்நாட்டிடம் அனுமதி கேட்டிருந்தார். மறுப்பு & மஸ்க் குற்றச்சாட்டு மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை தென் ஆப்பிரிக்காவில் அமல்படுத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், அனுமதி கொடுக்கமுடியாது […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சீனா, மெக்சிகோ, கனடாவுக்கு 25% சுங்க வரியை விதிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அமெரிக்காவின் உள்நாட்டு தொழில்கள் பாதுகாக்கப்படும் என்பதால் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரியை விதிக்க தான் முடிவு செய்திருப்பதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியாவும் அமெரிக்காவுக்கு அதிகம் வரிவிதிப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்க நானும் அவர்கள் எவ்வளவு […]
டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலமானது விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக வானில் அந்த விண்கலம் வெடித்து சிதறடிக்கப்பட்டது. இதனை அடுத்து விண்ணில் அதன் துகள்கள் பரவியது. இதனால் அப்பகுதியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. தெற்கு டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து போகா சிகா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வியாழன் அன்று மாலை 6.30 […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களை காரணம் சுட்டி காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்… காரணம் என்ன? பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்கு வந்தால் சில பயங்கரவாதிகள் ஊடுருவலாம். அப்படி நடந்தால் அது தங்களுடைய நாட்டு மக்களுக்கு […]
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தற்பொழுது, நிலாவில் ப்ளூ கோஸ்ட் லூனார் லேண்டர் தரையிறங்கிய சிலிர்க்க வைக்கும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. நிலாவின் மேற்பரப்பில் நீண்டகால மனிதர்கள் அதிக நேரம் தங்க நாசா முன்னெடுக்கும் முயற்சிகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். இந்த வீடியோவில், இதுவரை இல்லாத அளவிற்கு நிலாவின் மேற்பரப்பை மிகத் […]
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோர் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் காரசார விவாதங்களில் ஈடுபட்டனர். இதனை அடுத்து உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ உதவிகளை நிறுத்தப்போவதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். உக்ரைனில் உள்ள கனிமவளங்கள் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திலும் ஜெலென்ஸ்கி கையெழுத்திடாமல் மேற்கண்ட சந்திப்பின் போது பாதியிலேயே சென்றுவிட்டார். இருந்தும், அமெரிக்கா […]
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழலில் நிலவி வரும் நிலையில், போர் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதில் அதிகமாக தீவிரம் காட்டிகொண்டு அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, போர் நிறுத்தம் செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது. இது போன்ற ஒரு அரிதான நிகழ்வு இதற்கு முன் நடந்திருக்கிறதா? என்று உலகமே ஷாக்கிங் ஆக பார்க்கும் வகையில், இரு நாடு அதிபர்கள் வார்த்தை போர் செய்து கொண்டனர். அதாவது, ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் […]
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அதிகாலை 2.36 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலிருந்து அலறியபடி வெளியேறினர். ஆனாலும், தற்போது வரை பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. காத்மாண்டுவிலிருந்து 65 கி.மீ கிழக்கே உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக, அவர் EU இல் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். திடீரென டொனால்ட் ட்ரம்ப் இப்படி கூறியிருப்பது அமெரிக்கா மற்றும் EU இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேசிய டொனால்ட் ட்ரம்ப் “ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர பிரச்சாரமும், தேர்தல் பிரச்சார நிதி உதவிகளும். டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்க அரசாங்க பணபரிவர்தனைகளை கட்டுப்படுத்தும் DOGE எனும் அமைப்பின் தலைவராக உலக பணக்காரரான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இதற்கு சில எதிர்ப்புகள் எழுந்தாலும் அந்த பொறுப்பில் அடுத்தடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டிரம்பிற்கு மிக நெருக்கமாக அமெரிக்க அரசு செயல்பாட்டில் ஈடுபட்டு […]
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி, இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார்’ என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். டிரம்ப் அவ்வாறு கருத்து தெரிவித்திருந்த நிலையில், ராஜினாமா செய்ய தயார் என உக்ரைன் அதிபர் அறிவித்திருக்கிறார். […]
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க வைக்கின்றன. இதனால் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது. அதற்கொரு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நிகந்துள்ளது. அதாவது, வாஷிங்டன்னில் உள்ள ஓவல் மைதானத்தில் இருக்கும் தனது மேஜையை டொனால்ட் டிரம்ப் மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு புதிய ஜனாதிபதி பொறுப்பேற்ற உடன், தனக்கு பிடித்த அலுவலக மேஜையை 7 பாரம்பரிய […]
பெய்ஜிங் : கொரோனா காலத்தை யாரு தான் மறக்க முடியும்? அந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா அச்சத்தை பார்த்து எத்தனை பேர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். கொரோனா பாதிப்பு இப்பொழுது இல்லை என்றாலும், அவ்வபோது கொரோனா தொற்று போலவே சில வைரஸ் தொற்று பரவுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை தற்போது கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர் Shi Zhengli அறிவித்துள்ளார். […]
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல் கதவுகள் வழியாக, உதவி கேட்டு நின்றிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதில் சிலர் தங்கள் ஹோட்டல் அறை ஜன்னல்களில் உதவி […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பபை உயர்த்தி அதன் மூலம் நாட்டின் வருவாயை பெருக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இறக்குமதி வரி : இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தில், அவரை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான […]
வாசிங்டன் : இந்தியாவில் “வாக்காளர் வாக்குப்பதிவு”-க்காக நியமிக்கப்பட்ட 21 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ரத்து செய்வதற்கான எலோன் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறையின் (DOGE) முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக கட்டணங்களைக் கருத்தில் கொண்டு அந்த பெரும் நிதி உதவியின் அவசியம் பற்றி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கு நாம் ஏன் ரூ.182 கோடி ($21M) தர வேண்டும்? வர்களிடம் நிறைய […]
கனடா : கனடாவில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது தலைக்குப்புற கவிழ்ந்ததில் பலர் காயமடைந்தனர். டெராண்டோ பியர்சன் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய டெல்டா 4819 விமானம், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. விபத்தை தொடர்ந்து பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். மேலும், அதில் பயணம் செய்த 76 பயணிகள் 4 ஊழியர்கள் என, மொத்தம் 80 பேர் அந்த விமானத்தில் பயணித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 18 பேர் காயமும் மூன்று பேர் […]