டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் சூப்பர்வைசர் – அலுவலக உதவியாளர் வேலை.!

SPMCIL: செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்த

SPMCIL Recruitment 2024

SPMCIL:செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில்  காலியாக உள்ள 96 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன நிறுவனமாகும். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமானSPMCILஎன்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 15-03-2024 அன்று முதல் தொடங்கியது.  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும் கட்டணம் செலுத்துவதற்கும் கடைசி தேதி வருகின்ற 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.

விண்ணப்பக் கட்டணம்

UR, OBC, EWS பிரிவினருக்கு ரூ.600 எனவும், SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணம் செலுத்தும் முறை

ஆன்லைன் பேமெண்ட்

பணியின் விவரங்கள்

சூப்பர்வைசர் (TO-Printing/Tech Control) – 2

சூப்பர்வைசர் (தொழில்நுட்பக் கட்டுப்பாடு) -5

ஜூனியர் டெக்னீஷியன் (அச்சிடும்/கட்டுப்பாடு) – 68

ஜூனியர் டெக்னீஷியன் (ஃபிட்டர்) – 3

ஜூனியர் டெக்னீஷியன் (வெல்டர்) – 1

ஜூனியர் டெக்னீஷியன் எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டேஷன்) – 3

சூப்பர்வைசர் (OL) (RM) – 1

ஜூனியர் அலுவலக உதவியாளர் – 12

தீயணைப்பு வீரர் – 1

வயது வரம்பு

18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி

டிப்ளமோ, ஐடிஐ, பிஇ, பி.டெக், பி.எஸ்சி, 10ம் வகுப்பு என ஒவ்வொரு பணிக்கு ஏற்றார் போல் கல்வி தகுதி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு வேலைக்கு ஏற்றார் பில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் சூப்பர்வைசர் – அலுவலக உதவியாளர் வேலை.!