அசத்தலான மீன் ரோஸ்ட் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன்களை விரும்பி சாப்பிடுகிறோம்.

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன்களை விரும்பி சாப்பிடுகிறோம். மீன்களை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுகிறோம்.

தற்போது இந்த பதிவில், மீன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

மீன் – அரை கிலோ

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகு தூள் – 2 டீஸ்பூன்

தனியா தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

நல்லேண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

முட்டை – 3

செய்முறை

மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தம் செய்த பின் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் முட்டை அடித்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.

unknown node

அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை கலவையில் போட்டு எடுத்து பின் எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். இப்பொது அசத்தலான மீன் ரோஸ்ட் தயார்.