15,000 பிரசவம் பார்த்த நரசிம்மா காலமானார்....ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி...!!

15,000 மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்து உதவிய 98 வயதான மூதாட்டியான நரசம்மா காலமானார்.  கர்நாடக மாநிலத்தில் உள்ள பவகடா வட்டத்தின் அருகில் கிருஷ்ணாபுரா என்ற

15,000 மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்து உதவிய 98 வயதான மூதாட்டியான நரசம்மா காலமானார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பவகடா வட்டத்தின் அருகில் கிருஷ்ணாபுரா என்ற கிராமத்தில் 1920-ம் ஆண்டில் பிறந்த சுலாகிட்டி நரசம்மா அந்த பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வந்தார். சுலாகிட்டி நரசம்மா , அவரது பாட்டியிடம் இருந்து பிரசவம் பார்க்கும் முறையை கற்றுக் கொண்டு, அதற்க்கு பின் தனியாக பிரசவம் பார்க்க ஆரம்பித்தார்.

இவருக்கு சுலாகட்டி என்ற பெயர், வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி என்ற பொருள்படுவதால் அதை அவருடைய பெயருடன் இணைந்து கொண்டார். அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத பல கிராம பகுதிகளுக்கு சென்று அங்கு இருக்கும் மக்களுக்கு , கர்ப்பிணி பெண்களுக்கு சுலாகிட்டி நரசம்மா மூதாட்டி பிரசவம் பார்த்து வந்தார்.சுலாகிட்டி நரசம்மா மூதாட்டி இதுவரை சுமார் 15,000-க்கும் அதிகமான பிரசவத்தை பார்த்துள்ளார்.

unknown node

கிட்டத்தட்ட சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேல் சுலாகிட்டி நரசம்மா,இலவசமாக பிரசவம் பார்த்து ஆற்றிய சேவையை பாராட்டி கடந்த 2012-ம் ஆண்டுக்கான  சிறந்த குடிமகள் விருதும், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 25-ம் தேதி பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது உடல்நலக்குறைவால் பெங்களூருவில் சுலாகிட்டி நரசம்மா காலமானார்.இவரின் மறைவுக்கு பல்வேறு பகுதியில் இருந்து வந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.