காஷ்மீரில் கூடுதலான பாதுகாப்பு படையினரை அனுப்பியதை பற்றி மத்திய அரசு எந்தவித காரணமும் கூறவில்லை. காஷ்மீரில் உள்ள முக்கிய நுழைவு வாயில்கள் ரிசர்வ் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.மேலும் வழக்கமாக பள்ளிகளுக்கு விடப்படும் கோடை விடுமுறை 10 நாள்களுக்கு முன் விடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவி உள்ளது.
unknown nodeமேலும் மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை முன்னதாகவே வாங்கி வைத்து உள்ளனர்.காஷ்மீரில் கடந்த வாரம் தான் துணை இராணுவ வீரர்கள் 10,000 பேர் அனுப்பட்டு இருந்தனர்.
unknown nodeஇந்நிலையில் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை விலக்கி கொள்ள உள்ளதாகவும் , அதனால் அங்கு கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் தான் அதிக கூடுதல் இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .ஆனால் இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.