"சபரிமலையில் 500 பெண் காவலர்கள்" கேரள அரசு அதிரடி....!!

சபரிமலையில் பெண் பக்தர்களின் பாதுகாப்புக்காக 500 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின்

சபரிமலையில் பெண் பக்தர்களின் பாதுகாப்புக்காக 500 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆண்கள் அதிக அளவில் வரக்கூடிய சபரிமலையில் பெண் பக்தர்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்தது.இதற்கு விளக்கம் அளித்த கேரள காவல்துறை உயரதிகாரிகள், பெண்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேர கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். கேரள காவல்துறையில் 6 ஆயிரம் பெண் போலீசார் இருப்பதாகவும் அதில் 500 பேரை சபரிமலை பாதுகாப்புக்கு ஒதுக்கி இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

DINASUVADU