நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் லென்ஸ் பெட்டியில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு – என்சிபி தகவல்....!!

Actor Shahrukh Khan's son Aryan Khan's lens box drug innovation - Ncb information ....

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் சிறிய லென்ஸ் பெட்டியில் (lens case) இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக என்சிபி தெரிவித்துள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று முன்தினம் இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

unknown node

தடை செய்யப்பட்ட போதைப்பொருள்:

இதன்காரணமாக,அந்த சொகுசு கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் அந்தக் கப்பலில் ஏறினர்.இதனைத் தொடர்ந்து,கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன்,எம்.டி.எம்.ஏ, ஹஷிஷ், உள்ளிட்ட சில போதைப் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்த நிலையில், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது:

இதனையடுத்து,சொகுசு கப்பலில் போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் போதைப்பொருள் தடுப்பு போலீசார் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும்,முதற்கட்டமாக அவர்களது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர்,விசாரணையின் முடிவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நேற்று கைது செய்யப்பட்டார்.சுமார் 20 மணி நேரமாக நடைபெற்ற விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

unknown node

மேலும்,கைது செய்யப்பட்ட எட்டு பேரில் மூன்று பேர்,போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் (என்சிபியால்) மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில்,ஆர்யன் கானின் சிறிய லென்ஸ் பெட்டியில் (lens case) இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக என்சிபி தெரிவித்துள்ளது. மேலும்,மருந்துகள்,பெண்களின் சுத்திகரிப்பு பட்டைகள்(sanitary pads) மற்றும் மருந்துப் பெட்டிகளிடையே மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.

unknown node

அதுமட்டுமல்லாமல்,ஆர்யன் கானின் வாட்ஸ்அப் அரட்டைகளில் அவரும், மற்றும் அவரது நண்பரும் சட்டவிரோத போதைப்பொருள் பற்றி பேசியது தெரிய வந்துள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்,நடிகர் சல்மான் கான் ,மும்பையில் உள்ள ஷாருக்கான் பங்களாவிற்கு வருகை புரிந்தார்.சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சல்மான் கான் ஷாருக்கான் வீட்டில் இருந்து புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node