பிஜேபிக்கு எதிராக வெகுண்டெழுந்த அதிமுக MP..!!

அண்ணா பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான திட்டங்களை பெறுவதில்  மொழி மிக அவசியமானதாக இருப்பதாக துணை குடியரசுத்தலைவர் சொல்கிறார். ஆனால்

மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் ஹிந்தியிலேயே திணித்து வருகிறது என மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அண்ணா பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான திட்டங்களை பெறுவதில்  மொழி மிக அவசியமானதாக இருப்பதாக துணை குடியரசுத்தலைவர் சொல்கிறார். ஆனால் மத்தியஅரசு அனைத்து திட்டங்களையும் ஹிந்தியிலேயே திணித்து வருகிறது. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அண்ணா கூறியுள்ளார்.

அதனையேதான் தொடர்ந்து நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்.  மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மொழியையும் இயக்கத்தையும் ,  ஆட்சியையும் அழித்துவிட முடியாது. வெற்றிடத்தை முதல்வரும் துணை முதல்வரும் நிரப்பி வருகின்றனர். மாநில அரசு அனைத்து திட்டங்களையும் செய்ய வேண்டியுள்ளது ஆனால் அதற்கான தொகைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது என காட்டமாக  தெரிவித்தார்.

DINASUVADU