கர்நாடக தேசிய பூங்காவின் அருகே உள்ள சாலையில் தமிழகத்தை சேர்ந்த லாரி ஒன்று யானை மோதியதில் யானை உயிரிழந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே, பந்திப்பூர் தேசிய பூங்கா புலிகள் காப்பகம் பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் வனவிலங்குகள் நலனுக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில், கோவையை சேர்ந்த லாரி ஒன்று கேரளாவில் சரக்கு இறக்கம் செய்து காலியாக அந்த பகுதியில் வந்துள்ளது. அப்போது 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று சாலையை கடக்க முயல்கையில் அந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்துள்ளது. அதனை அடுத்து அப்பகுதி வனத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் அய்யாசாமி, உதவியாளர் ஆனந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர்.