தேர்வெழுத, உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடந்த 21 வயது பெண்!!

Default Image

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் 21 வயது பெண் ஒருவர் தேர்வில் கலந்து கொள்ள சம்பாவதி ஆற்றைக் கடந்துள்ளார். அந்த பெண், அவரது சகோதரன் மற்றும் மற்றொரு குடும்ப உறுப்பினரின் உதவியுடன் உதவியுடன் கழுத்தளவு தண்ணீரில் அலையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் வட்டாரத்தில் நடந்துள்ளது. மர்ரிவலசை கிராமத்தைச் சேர்ந்த தட்டி கலாவதி என்ற பெண், விசாகப்பட்டினத்தில் தேர்வு எழுத வேண்டியிருந்தது.கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமம் துண்டிக்கப்பட்டது. ஆற்றின் மறுகரைக்கு அவளை அழைத்துச் செல்ல படகுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆதலால், வேறு வழியின்றி பெருக்கெடுத்த ஆற்றின் வழியாக நீந்தி மறுகரைக்குச் சென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்