டஸ்ஸால்ட்- HAL நிறுவனங்கள் இடையே எந்த ஒப்பந்தமும் போட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,அவசர நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது. தற்போதுகூட ஹிமாச்சலபிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளது.தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் கருத்துக்களை எதிர்க்கவோ, மறுக்கவோ மாட்டேன். ரபேல் போர்விமான விவகாரத்தில் அரசியல் உள்நோக்குடன் காங்கிரஸ் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. தமிழக மீனவர்களுக்கு இந்தியகடற்படை எப்போதும் உதவி செய்துவருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.