ஆர்யன் கான் சிறையிலிருந்து விடுவிப்பு ..., நேரில் வந்து அழைத்து சென்று ஷாருக்கான்!

Shah Rukh Khan's son Aryan Khan has been released from Arthur Road jail after 3 weeks.

போதை வழக்கியில் கைதாகி 3 வாரங்களுக்கு பின்பதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிரபல திரை உலக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட சிலர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 8ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என இரண்டு முறை ஆர்யன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனா, அவை இரண்டும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு கொடுத்திருந்தார். இந்த ஜாமீன் மனுவிற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 14 நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் ஆரியன் கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு பின்னதாக தற்பொழுது ஆரியன் கான் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை அழைத்துச் செல்வதற்காக அவரது தந்தை ஷாருக்கான் நேரில் சென்று உள்ளார்.