ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு...! துணை முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு....!

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜஸ்தானில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது . இங்கு இரண்டு முறை முதலமைச்சராக இருந்த அசோக் கெலாட் மற்றும் இளம் தலைவர் சச்சின் பைலட் இடையே, முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்கு கடும் போட்டி இருந்தது. நேற்று நடந்த ஆலோசனையில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் இறுதியாக  ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதேபோல்  ராஜஸ்தானின் துணை முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.