" பாகிஸ்தானுக்கு போர் மூலம் பதில் சொல்ல வேண்டும் " பாபா ராம்தேவ் வேண்டுகோள்...!!

காஷ்மீரின் எல்லையில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40_க்கும் மேற்பட்டோர்

காஷ்மீர் புல்மாவா தாக்குதலில் துணை ராணுவ படையினர் 40_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

போர் மூலமாக பாகிஸ்தானுக்கு பதில் சொல்வது தான் சரியான தீர்வு என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் எல்லையில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து  பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுப்பது சரியான பதிலடியாக இருக்கும் என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும் புல்மாவா தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த அவர் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் சுமார் 70 ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் , இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் பொறுமை காக்க முடியாது என தெரிவித்த அவர் போர் மூலமாக பாகிஸ்தானுக்கு பதில் சொல்வது தான் சரியான தீர்வு என்று தெரிவித்துள்ளார்.இன்று இந்திய விமானப்படை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.