கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்! கேரள வாகனங்கள் தமிழகத்திற்குள் வர தடை!

Vehicles carrying poultry, duck eggs, meat and fodder from Kerala have been ordered to be sent back as bird flu is spreading rapidly.

பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன.  இதனால் இறந்த வாத்துகளிலிருந்து 8 மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் ‘எச் 5 என் 8’ வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

அங்கு பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தொடர்ந்து வாத்து கோழிகள் உயிரிழந்து வருகின்றன. இதனால் சுற்று வட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துக்களை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல், தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள ஆறு மாவட்டங்களில், கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடை துறை இயக்குனர் ஞானசேகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், குமரி, தென்காசி, திருப்பூர், கோவை, நீலகிரி, உள்ளிட்ட 26 சோதனை சாவடிகள் கண்காணிப்பு தேவை என்றும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு குளோரின்-டை-ஆக்ஸைடு  தெளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.